இலங்கை பெண் நடித்துள்ள web திரைப்படம்!

web திரைப்படம் வரும் ஆகஸ்ட் மாதம் 08 ஆம் திகதி திரைக்கு வரவுள்ளது.

போதைப்பொருள் பழக்கவழக்கம், அதற்கு அடிமையாகும் பெண்கள், அதற்காக அவர்கள் செய்யும் விடயம், அதனுடைய பின்புலம் என ஒரு அதிரடி கதையாக உருவாக்கப்பட்டுள்ள இந்த படம் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த படத்திற்கு கார்த்திக் ராஜா இசையமைத்திருக்கிறார். அருண் இயக்கியிருக்கிறார். சுபப்ரியா மலர், ராஜேந்திரன், அனன்யா மணி மற்றும் ஷாஷ்வி பாலா ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்த படம் சிறந்த கமெர்ஷியல் திரைப்படமாக இருக்கும் அதேசமயம், சமூகத்திற்கு ஒரு நல்ல தகவலை வழங்கும் படமாகவும் இருக்கும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

இதில் முக்கியமான விடயம் ஷாஷ்வி பாலா இலங்கையைச் சேர்ந்த பெண் என்பதுடன், இலங்கையில் வானொலி தொகுப்பாளினியாகவும், சின்னத் திரை தொகுப்பாளினியாகவும் , மொடலிங் மங்கையாகவும் வலம் வந்துள்ளார்.

கடந்த சில காலமாக சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து வந்த அவர் தற்போது, நடிகர் ஆரியுடன் இணைந்து ”எல்லாம் மேலே இருக்கிறவன் பார்த்துப்பான்” என்ற படத்தின் மூலம் மிகப்பெரிய வாய்ப்பை பெற்றுள்ளார்.

இதற்கிடையே தற்போது அருண் இயக்கத்தில் web என்ற திரைப்படத்தில் முன்னணி கதாபாத்திரத்தை ஏற்று நடித்துள்ளார்.

இது குறித்து ஊடகத்திடம் பேசிய அவர், very good script. எல்லாருக்குமே score பண்றதுக்கான space இருக்கு. ஒரு நல்ல message வெளியில போகப் போகுது. அதோட எங்களோட profileக்கு நல்ல ஒரு ரீச்ச கொடுக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.

WEB - Tamil Movie Teaser | Natty, Shilpa Manjunath | Haroon | Velan Productions

Social Share
FacebookTwitterRedditLinkedinPinterestMeWeMixWhatsapp

Leave a Reply Cancel reply

Exit mobile version