உரிய தகவல்களை விவசாயிகளுக்கு வழங்காததால் அரசாங்கத்திற்கு ஏற்பட்டுள்ள சிக்கல்!

இலங்கையில் தற்போது வறட்சியான காலநிலை பதிவாகி வருகின்ற நிலையில், இது குறித்து விவசாயிகளுக்கு முறையாக அறிவிக்கப்படவில்லை எனவும், அதற்கு சம்பந்தப்பட்ட அனைத்து திணைக்களங்களும் பொறுப்பேற்க வேண்டும் எனவும் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

அதாவது தண்ணீரைசிக்கனமாக பயன்படுத்துமாறு எந்தவொரு துறையிலிருந்தும் விவசாயிகளுக்கு அறிவித்தல் விடுக்கப்படவில்லை என அமைச்சர் குற்றம் சாட்டியுள்ளார்.

இதனால் விவசாயிகள் அதிக அளவில் நெற்பயிர்களை பயிரிட நடவடிக்கை எடுத்துள்ளனர் எனவும், அதற்கான உரங்களை வழங்க அதிகளவில் நிதி தேவைப்படுவதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதன்காரணமாக அரசாங்கத்திற்கும் பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ள அமைச்சர், வறட்சி மற்றும் நீர் பற்றாக்குறை குறித்து விவசாயிகளுக்கு அறிவிக்காதமைக்கு  விவசாய திணைக்களம், நீர்ப்பாசன திணைக்களம், மகாவலி அதிகார சபை, வளிமண்டலவியல் திணைக்களம் உள்ளிட்ட அனைத்து திணைக்களங்களும் பொறுப்பேற்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

Social Share
FacebookTwitterLinkedinWhatsappInstagramViberTelegramFacebook MessengerGmailPinboardSkype
Facebook
Twitter
Reddit
Linkedin
Pinterest
MeWe
Mix
Whatsapp

Leave a Reply Cancel reply

Exit mobile version