அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தம் தொடர்பான பரிந்துரைகளையும் முன்மொழிவுகளையும் முன்வைக்குமாறு கட்சித் தலைவர்களுக்கு எழுத்து மூலம் அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்துவது தொடர்பில் எதிர்வரும் 15-08-2023 ஆம் திகதிக்கு முன்னதாக பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் குழுக்களின் பரிந்துரைகளையும் முன்மொழிவுகளையும் பெற்றுத்தருமாறு ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க கட்சிகள் மற்றும் குழுக்களின் தலைவர்களுக்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளார்.
தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் நோக்கில் கடந்த 26-07-2023 அன்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் கூட்டப்பட்டிருந்த சர்வகட்சி மாநாட்டில் ஏற்றுக்கொள்ளப்பட்ட விடயங்களுக்கு அமைவாக ஜனாதிபதியின் பணிப்புரையின் பேரில் மேற்படி அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.