மின் கட்டணத்தை மீண்டும் அதிகரிப்பது தொடர்பில் இலங்கை மின்சார சபை, பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் அனுமதிக் கோரியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜுலை மாதம் 21 ஆம் திகதி பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் முன்வைக்கப்பட்டுள்ள யோசனையில் இந்த விடயம் குறித்து அனுமதி கோரப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த காலங்களில் மக்களால் தாங்கிக் கொள்ள முடியாத அளவிற்கு மின் கட்டணம் அதிகரிக்கப்பட்டிருந்த நிலையில், அண்மையில் அதனை 15 வீதத்தால் குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் தற்போது மீண்டும் மின் கட்டண உயர்வு குறித்து அனுமதி கோரப்பட்டுள்ள விவகாரம் மக்களுக்கு பேரிடியை ஏற்படுத்தியுள்ளது.