இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான நான்காவது டெஸ்ட் போட்டி இன்று லண்டன் த ஓவல் மைதானத்தில் ஆரம்பிக்கவுள்ளது. இரு அணிகளுக்குமிடையிலான 5 போட்டிகளடங்கிய தொடர் 1-1 என்ற சமநிலையில் காணப்படுவதனால் இன்றைய போட்டி முக்கியமானதாக அமையவுள்ளது. கடந்த போட்டியில் இந்தியா அணி மோசமான தோல்வியினை சந்தித்துள்ள நிலையில் அவர்கள் மீதான பார்வையே இன்றைய போட்டியில் அதிகம் காணப்படுகிறது. இந்தியா அணியின் துடுப்பாட்டம் மற்றும் துடுப்பாட்ட பிரயோகங்கள் கடந்த போட்டியில் மோசமாக அமைந்தது இத்தியா அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது. இந்த நிலையில் இன்றைய போட்டியில் ஓரிரு மாற்றங்கள் நடக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் அது துடுப்பாட்ட வரிசையில் இருக்காது என்றே நம்பப்படுகிறது. சகலதுறை வீரருக்கான இடத்தில் ஜடேஜா நீக்கப்பட்டு அஷ்வின் விளையாடும் வாய்ப்புகளே அதிகம் காணப்படுகின்றன. வேகப்பந்துவீச்சில் இஷாந்த் ஷர்மா நீக்க்கப்பட்டு சார்தூள் தாகூர் விளையாடும் வாய்ப்புகளுமுள்ளன. எப்பிடி இருப்பினும் மாற்றங்கள் தொடர்பில் இந்தியா அணி எந்த அறிவிப்புகளையும் இதுவரை விடவில்லை. இங்கிலாந்து அணி ஒரு மாற்றம் செய்துள்ளது. குழைந்தை கிடைத்துள்ளமையினால் ஜோஸ் பட்லர் அணியிலிருந்து விலகியுள்ளார். ஜொனி பாஸ்டோவ் விக்கெட் காப்பாளராக கடமையாற்ற உள்ளார். ஒல்லி பொப் அணியில் இணையவுள்ளார்.
த ஓவல் மைதானத்தில் நடைபெறும் போட்டிகள் முடிவை தரக்கூடியவை. அந்த வகையில் இன்று ஆர்மபமாகும் போட்டி முடிவினை தரும் என்பதனால் முக்கியமான போட்டியாக எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் இந்தியா அணி 1971 ஆம் ஆண்டின் பின்னர் வெற்றிகளை இந்த மைதானத்தில் பெற்வில்லை என்பதும், இங்கிலாந்து இறுதியாக தென்னாபிரிக்கா, இந்தியா, அவுஸ்திரேலியா அணிகளை வெற்றி பெற்றுள்ளது என்பதும் முக்கியமானது. இந்த போட்டி விறு விறுப்பாக இருக்குமென அதிகமாக எதிர்பார்க்கப்படுகிறது.

Social Share
FacebookTwitterLinkedinWhatsappInstagramViberTelegramFacebook MessengerGmailPinboardSkype
FacebookTwitterRedditLinkedinPinterestMeWeMixWhatsapp

Leave a Reply Cancel reply

Exit mobile version