யாழ் அணி தடுமாற்றம். கண்டிக்கு இலகுவான இலக்கு.

ஜப்னா கிங்ஸ் மற்றும் பி-லவ் கண்டி அணிகளுக்கிடையிலான லங்கா பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டி தொடரின் ஐந்தாம் நாளின் இரண்டாவது போட்டி கண்டி பல்லேகல சர்வதேசக் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற கண்டி அணி களத்தடுப்பை தெரிவு செய்து சிறப்பான பந்துவீச்சு மூலம் யாழ் அணியின் துடுப்பாட்ட வீரர்களை கட்டுப்படுத்தியுள்ளது. அஞ்சலோ மத்தியூஸ் முதல் ஓவரிலேயே இரண்டு ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களையும் ஆட்டமிழகச்செய்து யாழ் அணியை தடுமாற வைத்தார். அதனை தொடர்ந்தும் சரியான இணைப்பாட்டங்களை உருவாக்க முடியாமல் யாழ் அணி தடுமாறியது. நுவான் பிரதீப் மத்திய வரிசை விக்கெட்களை பதம் பார்க்க யாழ் அணிக்கு ஓட்டம் பெறும் வாய்ப்புகளும் குறைந்து போனது. வனிந்து ஹசரங்க இறுக்கமாக பந்து வீசி விக்கெட்களையும் கைப்பற்றி மேலும் யாழ் அணியை தடுமாற வைத்தார்.

துடுப்பாட்டத்தில் டுனித் வெல்லாளகே இறுதி நேரத்தில் தனித்து நின்று போராடினர், இருப்பினும் அவரின் துடுப்பாட்ட இடம் மற்றும் இணைப்பாட்டங்கள் சரியாக அமையாமல் போக ஓட்டங்களை அதிகரிக்க முடியவில்லை.

இள வயதிலும் அழுத்தங்களுக்கு மத்தியில் சிறந்த பந்துவீச்சாளர்களை எதிர்கொண்டு அவர் நுட்பமாக துடுப்பாடிய விதம் போற்றத்தக்கது.

இதுவரை நடைபெற்றுள்ள போட்டிகளின்படி யாழ் அணி மூன்றில் இரண்டு வெற்றிகளைப் பெற்று முதலிடத்தில் காணப்படுகிறது. கண்டி அணி மூன்றில் ஒரு வெற்றியினை பெற்று இரண்டு புள்ளிகளோடு ஐந்தாமிடத்தில் காணப்படுகிறது.

வீரர்ஆட்டமிழப்புபந்துவீச்சாளர்46
ரஹ்மனுள்ள குர்பாஸ்பிடி – துஷ்மாந்த சமீர  அஞ்சலோ மத்யூஸ்000500
சரித் அஸலங்கபிடி – தினேஷ் சந்திமால்அஞ்சலோ மத்யூஸ்050610
தௌஹித் ரிதோய்   பிடி – துஷ்மாந்த சமீரவனிந்து ஹசரங்க192230
டேவிட் மில்லர்பிடி –இசுரு உதான212230
பிரியாமல் பெரேராபிடி – வனிந்து ஹசரங்கநுவான் பிரதீப்222211
திசர பெரேராபிடி – வனிந்து ஹசரங்கநுவான் பிரதீப்020300
டுனித் வெல்லாளகே  282761
விஜயகாந் வியாஸ்கந்L.B.Wநுவான் பிரதீப்000100
மஹீஸ் தீக்ஷணBowledவனிந்து ஹசரங்க000400
நுவான் துஷாரL.B.Wவனிந்து ஹசரங்க000100
நன்றே பேர்கர்  060710
உதிரிகள்  04   
ஓவர்  20விக்கெட்  09மொத்தம்117   
பந்துவீச்சாளர்ஓ.ஓட்டவிக்
அஞ்சலோ மத்யூஸ்02000802
முஜீப் உர் ரஹ்மான்03001300
துஷ்மாந்த சமீர04002300
வனிந்து ஹசரங்க04000903
இசுரு உதான02001701
நுவான் பிரதீப்04003603

அணி விபரம்

ஜப்னா கிங்ஸ் – 1 திஸர பெரேரா, 2 விஜயகாந்த் வியாஸ்கந்த, 3 ரஹ்மனுள்ள குர்பாஸ், 4 டுனித் வெல்லாளகே, 5 மஹீஸ் தீக்ஷண, 6 பிரியாமல் பெரேரா, 7 டேவிட் மில்லர் 8 சரித் அஸலங்க 9 நன்றே பேர்கர் 10 நுவான் துஷார 11 தௌஹித் ரிதோய்

பி-லவ் கண்டி : தினேஷ் சந்திமால், பகார் ஷமான், அஞ்சலோ மத்யூஸ், இசுரு உதான, செஹான் ஆராச்சிகே, வனிந்து ஹசரங்க (c), ஆஷிப் அலி, முஜீப் உர் ரஹ்மான், நுவான் பிரதீப் , கமிந்து மென்டிஸ், துஷ்மாந்த சமீர

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version