ரணம் திரைப்படத்தின் டீசர் வெளியீடு!

நடிகர் வைபவ் நடிக்கும் ‘ரணம்’ திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

வைபவ் கடந்த 2008-ம் ஆண்டு வெங்கட்பிரபு இயக்கத்தில் வெளியான ‘சரோஜா’ படம் மூலம் தமிழில் நடிகராக அறிமுகமானார். அவரது நடிப்பில் கடந்த ஆண்டு ‘பபூன்’ படம் வெளியானது.

இதையடுத்து தற்போது ரணம் படம் வெளியாகவுள்ளது. ஷெரிஃப் இயக்கும் இப்படத்தில் நந்திதா ஸ்வேதா, தான்யா ஹோப் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

மது நாகராஜன் தயாரிக்கும் இப்படத்துக்கு ஆரோல் கொரல்லி இசையமைக்கிறார்.

Ranam Official Teaser | Vaibhav, Nandita,Tanya, Saras  | Sherief | Arrol Corelli | Madhu Nagarajan
Social Share
FacebookTwitterLinkedinWhatsappInstagramViberTelegramFacebook MessengerGmailPinboardSkype
FacebookTwitterRedditLinkedinPinterestMeWeMixWhatsapp

Leave a Reply Cancel reply

Exit mobile version