தினமும் பாதாம் சாப்பிடுவதால் இவ்வளவு மாற்றம் நிகழுமா?

பெண்கள் தங்களது உடல் ஆரோக்கியத்துககு அவசியமான ஊட்டச்சத்துக்களை பெறுவதற்கு முழு தானியங்கள்,  காய்கறிகள்,  பழங்களுடன் விதைகள்,   பருப்புகள்,   உலர் பழங்களையும் சாப்பிட வேண்டும்.

அந்த வகையில் பாதாம், பிஸ்தா,   உலர் திராட்சை, பேரீச்சம் பழம்,   அத்தி ஆகியவற்றில் உடலுக்கு நன்மை தரும் ஏராளமாக ஊட்டச்சத்துக்கள் அடங்கியுள்ளன.

இதில் பாதாமை தினமும் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகளை தெரிந்துகொள்வோம். பாதாமை ஊறவைத்து அதன் மேல் தோலை நீக்கிய பின்பு சாப்பிடுவதே சிறந்தது.

ஒரு கைப்பிடி அளவு பாதாமை முதல் நாள் இரவு ஊறவைத்து அடுத்தநாள் காலையில் எழுந்தவுடன் காலை உணவுக்கு முன்பாக சாப்பிடலாம். இவ்வாறு தினமும் சாப்பிட்டு வந்தால் புரதச்சத்து, நார்ச்சத்து,   வைட்டமின்கள்,   தாதுக்கள்  ஆன்டிஆக்சிடென்டுகள் மற்றும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் பெறலாம்.

தொடர்ந்து பாதாமை சாப்பிட்டு வருவதன் மூலம் சுவாசக்கோளாறு இதய நோய்,   நீரிழிவு நோய்,   சரும பிரச்சனை,   முடி உதிர்வு உள்ளிட்ட பல பிரச்சினைகளை தீர்க்கலாம். 

 தினமும் 6-7 ஊறவைத்த பாதாம் பருப்புகளை சாப்பிடுவதன் மூலம் மலச்சிக்கலில் இருந்து விடுபடலாம். உடல் எடையை குறைப்பதற்கு முயற்சிப்பவர்கள். தினமும் 5 பாதாம் பருப்புகளை சாப்பிட்டு வரவேண்டும். 

அத்துடன்  வயது முதிர்ச்சியால் வரக்கூடிய ஞாபக மறதி நோயை தடுக்கும் ஆற்றல் பாதாமில் உள்ளது. பாதாம் எண்ணெய் கொண்டு சருமத்தை மசாஜ்  செய்து வந்தால் உடலில் ரத்த ஓட்டத்தின் அளவு அதிகரித்து சருமம ஆரோக்கியமாகவும்,   பொலிவுடனும் இருக்கும்.

தினமும் இரவில் தூங்கச்செல்வதற்கு முன்பு முகத்தில் பாதாம் எண்ணெய் தடவி மென்மையாக மசாஜ் செய்து வந்தால் பொலிவு அதிகரிக்கும். மாதவிடாய் நின்ற பெண்கள் தினமும் பாதாம் பருப்பை சாப்பிட்டு வந்தால் சருமத்தில் ஏற்படும் சுருக்கங்களை போக்க முடியும்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version