பொத்துவில் தொடக்கும் பொலிகண்டி வரையிலான மக்கள் எழுசிப் போராட்டத்தின் ஒருங்கிணைப்பாளரான வேலன் சுவாமிக்கு நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி நீதவான் நீதிமன்றத்தில் இன்று (07.08) முன்னிலையாகுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
சட்டவிரோதமாக முன்னெடுக்கப்பட்ட போராட்டம் குறித்த விசாரணைகளுக்காகவே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் தமிழ் தேசிய கட்சியின் பொது செயலாளரான எம்.கே. சிவாஜிலிங்கத்திற்கும் நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.