புதிய சுகாதார கொள்கையை உருவாக்குவதற்கு சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல ஆளும் கட்சி மற்றும் எதிர்கட்சியின் முன்னாள் சுகாதார அமைச்சர்களுடன் கலந்துரையாடல்களை முன்னெடுக்க வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தி வலியுறுத்தியுள்ளது.
“ஆளும் கட்சியிலும் எதிர்க்கட்சியிலும் பல எம்.பி.க்கள் சுகாதார அமைச்சர் பதவியை வகித்துள்ளனர். சுகாதார இராஜாங்க அமைச்சர்களாக இருந்த சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே மற்றும் சீதா அறம்பேபொல போன்ற பாராளுமன்ற உறுப்பினர்களுடனும் அவர் பேச வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினரன் எரான் விக்கிரமரத்ன தெரித்துள்ளார்.
ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் இந்த எம்.பி.க்கள் சுகாதார கொள்கை குறித்து விவாதித்தால் பயனுள்ளதாக இருக்கும் எனக் கூறிய அவர், அரசாங்க மற்றும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கல்வி தொடர்பான கொள்கையை ஏற்றுக்கொண்டுள்ளனர் எனவும் தெரிவித்துள்ளார்.