கொழும்பு ஸ்ட்ரைக்கேர்ஸ் மற்றும் கோல் டைட்டன்ஸ் அணிகளுக்கிடையில் கண்டி, பல்லேகல சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற LPL போட்டியில் கடினமான வெற்றியிலக்கை துரத்தியடித்து கொழும்பு அணி வெற்றி பெற்றுள்ளது. இந்த வெறியின் மூலம் கொழும்பு அணி 4 புள்ளிகளைப் பெற்றுள்ள அதேவேளை ஐந்து அணிகளுமே நான்கு போட்டிகளில் விளையாடி தலா 4 புள்ளிகளைப் பெற்றுள்ளன.
பாபர் அஷாம் மிக சிறப்பாக துடுப்பாடி தனது பத்தாவது 20-20 சதத்தை பூர்த்தி செய்துகொண்டார். அவரின் அபாரமான துடுப்பாட்டமே கொழும்பு அணியின் வெற்றிக்கு காய் கொடுத்தது. LPL தொடரில் பெறப்பட்ட நான்காவது சதம் இதுவாகும். இந்த வருடத்தின் முதல் சதமாக இது அமைந்துள்ளது.
விறு விறுப்பான போட்டியில் 189 ஓட்டங்கள் என்ற கடினமான ஓட்ட இலக்கை நோக்கி துடுப்பாடிய கொழும்பு அணியின் ஆரம்பம் மிக அபாரமாக அமைந்தது. இன்று ஆரம்ப வீரராக களமிறங்கிய பத்தும் நிஸ்ஸங்க பாபர் அஷாமுடன் சிறந்த இணைப்பாட்டத்தை ஏற்படுத்தி சத இணைப்பாட்டத்தை வழங்கி அரைச்சதத்தையும் பூர்த்தி செய்தார்.
லங்கா பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் கோல் டைட்டன்ஸ் மற்றும் கொழும்பு ஸ்ட்ரைக்கேர்ஸ் அணிகளுக்கிடையிலான போட்டி கண்டி, பல்லேகல சர்வதேசக் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற கொழும்பு அணி களத்தடுப்பை தெரிவு செய்தது.
முதலில் துடுப்பாடிய காலி அணியின் துடுப்பாட்டம் மிக அபாரமாக அமைந்தது. குறிப்பாக ஆரம்ப துடுப்பாட்ட வீரர் ஷெவோன் டானியல் மிக அபாரமாக துடுப்பாடினார். அவரோடு ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களமிறங்கிய லசித் க்ரூஸ்புல்லே சிறந்த ஆரம்பம் ஒன்றை வழங்கினார். இருவரும் 87 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பகிர்ந்துகொண்டனர். இணைப்பாட்டம் முறியடிக்கப்பட்டதனை தொடர்ந்து காலி அணிக்கு இறுக்கமான நிலை ஏற்பட்டது.
பானுக்க ராஜபக்ஷ, ரிம் ஷெபேர்ட் ஆகியோர் இணைந்து நிதானமான துடுப்பாட்டத்தை மேற்கொண்டு பின்னர் வேகத்தை அதிகரித்தனர். இருவரும் 87 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பகிர்ந்தனர். இதன் காரணமாக வெற்றி பெறக்கூடிய இலக்கொன்றை காலி அணி பெற்றுக் கொண்டது. 20 ஓவர்களில் விக்கெட்களை இழந்து ஓட்டங்களை காலி அணி பெற்றது.
| வீரர் | ஆட்டமிழப்பு | பந்துவீச்சாளர் | ஓ | ப | 4 | 6 |
| பத்தும் நிஸ்ஸங்க | பிடி – ஷெவோன் டானியல் | ரப்ரைஸ் ஷம்சி | 54 | 40 | 5 | 1 |
| பாபர் அஸாம் | பிடி – கமிந்து மென்டிஸ | கசுன் ரஜித | 104 | 59 | 8 | 5 |
| நுவனிது பெர்னாண்டோ | பிடி – தசுன் ஷானக | ரப்ரைஸ் ஷம்சி | 08 | 13 | 0 | 0 |
| சாமிக்க கருணாரட்ன | 02 | 03 | 0 | 0 | ||
| மொஹமட் நவாஸ் | 14 | 04 | 1 | 1 | ||
| உதிரிகள் | 04 | |||||
| ஓவர் 20 | விக்கெட் 06 | மொத்தம் | 157 |
| பந்துவீச்சாளர் | ஓ | ஓ.ஓ | ஓட்ட | விக் |
| கசுன் ரஜித | 2.5 | 00 | 42 | 01 |
| ஷகிப் அல் ஹசன் | 04 | 00 | 30 | 00 |
| ரிச்சட் கராவா | 04 | 00 | 40 | 00 |
| ரப்ரைஸ் ஷம்சி | 04 | 00 | 27 | 02 |
| தசுன் ஷானக | 02 | 00 | 15 | 00 |
| அகில தனஞ்சய | 03 | 00 | 35 | 00 |
| வீரர் | ஆட்டமிழப்பு | பந்துவீச்சாளர் | ஓ | ப | 4 | 6 |
| ஷெவோன் டானியல் | L.B.W | ரமேஷ் மென்டிஸ் | 36 | 19 | 4 | 2 |
| லசித் குரூஸ்புல்லே | Bowled | லக்ஷன் சன்டக்கன் | 49 | 31 | 5 | 2 |
| பானுக ராஜபக்ச | Bowled | நசீம் ஷா | 30 | 31 | 2 | 0 |
| டிம் செய்பேர்ட் | 54 | 35 | 4 | 3 | ||
| தசுன் ஷானக | 06 | 04 | 1 | 0 | ||
| உதிரிகள் | 13 | |||||
| ஓவர் 20 | விக்கெட் 05 | மொத்தம் | 188 |
| பந்துவீச்சாளர் | ஓ | ஓ.ஓ | ஓட்ட | விக் |
| நசீம் ஷா | 04 | 00 | 36 | 01 |
| ரமேஷ் மென்டிஸ் | 04 | 00 | 33 | 01 |
| மொஹமட் நவாஸ் | 02 | 00 | 21 | 00 |
| மதீஷ பத்திரன | 04 | 00 | 41 | 00 |
| சாமிக்க கருணாரட்ன | 02 | 00 | 20 | 00 |
| லக்ஷன் சன்டக்கன் | 04 | 00 | 29 | 01 |