புதிய வகை கொரோனா திரிபு தொடர்பில் இலங்கை அவதானம்!

இங்கிலாந்தில் பரவும் புதிய வகை கொரோனா திரிபு தொடர்பில் இலங்கை சுகாதார பிரிவு எச்சரிக்கையாக இருப்பதாக தெரிவித்துள்ளது.

வெளிநாட்டில் பரவும் எந்தவொரு வைரஸ் குறித்தும் இலங்கை எச்சரிக்கை நிலையில் உள்ளதாக சுகாதார அதிகாரிகள் மேலும் தெரிவித்துள்ளனர்.

எரிஸ் எனப்படும் இந்த புதிய வகை கொரோன திரிபு, ஏனைய கொரோனா மாறுபாடுகளை விட மிகவும் ஆபத்தானது என்பதற்கு எந்த ஆதாரமும் இது வரையில் கண்டறியாயப்படவில்லை என இங்கிலாந்தின் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

இங்கிலாந்தின் மோசமான காலநிலையும், அங்குள்ள மக்கள் இடையே காணப்படும் குறைந்த நோய் எதிர்ப்பு சக்தியுமே இந்த வைரஸ் பரவலுக்கு முக்கிய காரணமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலைவலி, காய்ச்சல், தடிமன் என்பன எரிஸ் வைரஸ் தொற்றின் பொதுவான அறிகுறிகளாக பார்க்கப்படுவதுடன், உலகளவில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருவதால் இங்கிலாந்தில் புதிய வைரஸ் மேலும் பரவாமல் கட்டுப்படுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version