முதல் வெற்றி, இன்று இலங்கைக்கு போட்டி

உலகக்கிண்ண தொடரில் முதல் போட்டியாக இங்கிலாந்து மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பங்களாதேஷ் அணி துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது.
முதலில் துடுப்பாடிய பங்களாதேஷ் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 125 ஓட்டங்களை பெற்றது. இதில் முஷ்பிகுர் ரஹீம் 29(30) ஓட்டங்களை பெற்றார்.
பந்துவீச்சில் டய்மல் மில்ஸ் 3 விக்கெட்களையும், லியாம் லிவிங்ஸ்டொன் 2 விக்கெட்களையும், மொயின் அலி 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

பதிலுக்கு துடுப்பாடிய இங்கிலாந்து அணி 14.1 ஓவர்களில் 2 விக்கெட்களை இழந்து 126 ஓட்டங்களை பெற்றது. இதில் ஜேசன் ரோய் 61(38) ஓட்டங்களையும், டேவிட் மல்லான் ஆட்டமிழக்காமல் 28(25) ஓட்டங்களை பெற்றனர். பந்துவீச்சில் ஷரிபுல் இஸ்லாம், நசும் அஹமட் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்களை கைப்பற்றினர்.
இங்கிலாந்து அணி 8 விக்கெட்களினால் வெற்றி பெற்றது.இந்த போட்டியின் ஜேசன் ரோய் தெரிவு செய்யப்பட்டார்.

இரண்டாம் போட்டியாக ஸ்கொட்லாந்து மற்றும் நமீபியா அணிகளுக்கிடையிலான போட்டி நடைபெற்றது.
இந்த போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற நமீபியா அணி களத்தடுப்பை தெரிவு செய்தது.

முதலில் துடுப்பாடிய ஸ்கொட்லாந்து அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 109 ஒட்டங்களை பெற்றது.
இதில் மிச்செல் லீஸ்க் 44(27) ஓட்டங்களை பெற்றார். பந்துவீச்சில் ரூபென் ற்றுப்பிலிமன் 3 விக்கெட்களையும், ஜோன் பிரைலிங் 2 விக்கெட்களை கைப்பற்றினர். பதிலுக்கு துடுப்பாடிய நமீபியா அணி 19.1 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 115 ஓட்டங்களை பெற்றது. துடுப்பாட்டத்தில் ஸ்மிட் ஆட்டமிழக்காமல் 32 ஓட்டங்களையும், க்ரெய்க் வில்லியம்ஸ் 23 ஓட்டங்களையும் பெற்றனர்.
பந்துவீச்சில் மிச்செல் லீஸ்க் 2 விக்கெட்களை கைப்பற்றினார்.

நமீபியா அணி 6 விக்கெட்களினால் வெற்றி பெற்று முதல் உலககிண்ண வெற்றியினை பதிவு செய்தது.
இந்த போட்டியின் நாயகனாக ரூபென் ற்றுப்பிலிமன் தெரிவு செய்யப்பட்டார்

இன்று (28/10/2021) இரவு 7:30இற்கு இலங்கை மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கிடையிலான போட்டி நடைபெறவுள்ளது.

இலங்கை அணி முதல் போட்டியில் பங்களாதேஷ் அணியுடன் வெற்றி பெற்றுள்ள நிலையிலும், அவுஸ்திரேலியா அணி தென்னாபிரிக்க அணியினை வெற்றி பெற்றுள்ள நிலையிலும், இலங்கை ரசிகர்கள் இந்த போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற வேண்டுமென மிகுந்த எதிர்பார்ப்போடு உள்ளனர்.

முதல் வெற்றி, இன்று இலங்கைக்கு போட்டி
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version