இலங்கை மத்திய வங்கி வளாகத்திற்குள் நுழைய முயன்றவர்கள் கைது!

இலங்கை மத்திய வங்கியின் (CBSL) வளாகத்திற்குள் பலவந்தமாக நுழைய முயற்சித்த குற்றச்சாட்டில் 08 பேர் கொண்ட குழுவொன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

குத்தகை மற்றும் கடன் தவணை செலுத்துவோர் கூட்டு சங்கத்தின் குறித்த குழுவினர் வங்கிக்குள் நுழைய முயற்சித்ததை அடுத்து பதட்டமான சூழ்நிலை ஏற்பட்ட நிலையிலேயே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

குத்தகை வசதிகளுக்கான சலுகைகளை கோரி மத்திய வங்கிக்குள் வலுக்கட்டாயமாக பிரவேசிக்க முயற்சி செய்துள்ளனர்.

இவர்கள் கோட்டை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version