வாய்ப்பை தக்க வைத்துக்கொண்ட யாழ் அணி

லங்காக பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் இன்றையா நாளின் இரண்டாம் போட்டியும், கண்டி, பல்லேகல மைதானத்தின் இறுதிப் போட்டியுமான ஜப்னா கிங்ஸ் மற்றும் கொழும்பு ஸ்ட்ரைக்கேர்ஸ் அணிகளுக்கிடையிலான போட்டியில் யாழ் அணி 06 விக்கெட்களினால் வெற்றி பெற்று வாய்ப்பை தக்கவைத்துள்ளது.

147 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கு கடினமாக இருக்குமென எதிர்பார்க்கப்பட்ட போதும் யாழ் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்கள் சிறந்த ஆரம்பத்தை வழங்க யாழ் அணி வெற்றி பெற்றுக் கொண்டது. குர்பாஸ் அதிரடி ஆரம்பம் ஒன்றை யாழ் அணிக்காக வழங்கினார்.

நான்காமிலக்கத்தில் களமிறங்கிய திஸர பெரேரா அதிரடியாக துடுப்பாடி ஓட்ட வேகத்தை அதிகரித்து கொடுத்து வெற்றியை இலகுபடுத்தினர்.

வேகமாக பெறப்பட்ட வெற்றியின் மூலம் 06 புள்ளிகளை பெற்று ஓட்ட நிகர சராசரி வேகத்தையும் அதிகரித்துள்ள நிலையில் யாழ் அணிக்கான அடுத்த சுற்று வாய்ப்புகள் அதிகரித்துள்ளன. நிதானம் கலந்த அதிரடி வழங்கிய நிஷான் மதுஷ்க வெற்றி இலக்கை நோக்கி யாழ் அணியை நகர்த்தி சென்றார்.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பாடிய கொழும்பு அணி சிறந்த ஆரம்பத்தை பெற்றது. பத்தும் நிஸ்ஸங்க வேகமான ஆரம்பத்தை வழங்கினார். இருப்பினும் யாழ் அணி இணைப்பாட்டத்தை முறியடித்து அடுத்தடுத்து விக்கெட்களை கைப்பற்றி தமது கைவரிசையினை காட்டியது. டில்ஷான் மதுசங்க மற்றும் டுனித் வெல்லாளகே ஆகியோரின் பந்துவீச்சு சிறப்பாக அமைந்தது. 12 ஓட்டங்களுக்குள் நான்கு விக்கெட்கள் கொழும்பு அணிக்கு வீழ்ந்தது.

20 ஓவர்கள் நிறைவில் 08 விக்கெட்களை இழந்து 146 ஓட்டங்களை கொழும்பு அணி பெற்று போராடக் கூடிய நிலையில் தமது துடுப்பாட்டத்தை நிறைவு செய்துள்ளது.

யாழ் அணி 06 புள்ளிகளைப் பெற்றுள்ள போதும் ஒரு போட்டி முன்னணியில் காணபப்டுகின்றனர். எனவே மீதமுள்ள இரு போட்டிகளும் அவர்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாகவே அமையவுள்ளது.

வீரர்ஆட்டமிழப்புபந்துவீச்சாளர்46
நிஷான் மதுஷ்கBowledநசீம் ஷா463233
ரஹ்மனுள்ள குர்பாஸ்பிடி – இப்திகார் அஹமட்மதீஷ பத்திரன  392133
சரித் அஸலங்கபிடி – இப்திகார் அஹமட்லக்ஷான் சண்டகன்121510
திசர பெரேராBowledநசீம் ஷா170721
டேவிட் மில்லர்   010300
தௌஹித் ரிதோய்     180940
      
      
      
      
      
உதிரிகள்  17   
ஓவர்  14.3விக்கெட்  04மொத்தம்150   
பந்துவீச்சாளர்ஓ.ஓட்டவிக்
நசீம் ஷா3.3002602
மொஹமட் நவாஸ்02002500
சாமிக்க கருணாரட்ன02002400
மதீஷ பத்திரன 03002701
லக்ஷான் சண்டகன்03003001
ரமேஷ் மென்டிஸ்01001400
    

வீரர்ஆட்டமிழப்புபந்துவீச்சாளர்46
பத்தும் நிஸ்ஸங்கL.B.Wடுனித் வெல்லாளகே362570
பாபர் அஸாம்பிடி – டேவிட் மில்லர்டில்ஷான் மதுசங்க242121
லஹிரு உதார பிடி – மஹீஸ் தீக்ஷணமஹீஸ் தீக்ஷண292421
நுவனிது பெர்னாண்டோபிடி – மஹீஸ் தீக்ஷணடில்ஷான் மதுசங்க020300
இப்திகார் அஹமட்Bowledடுனித் வெல்லாளகே030600
மொஹமட் நவாஸ் ஹமட் நவாஸ்பிடி – தௌஹித் ரிதோய்   சொஹைப் மலிக்272031
சாமிக்க கருணாரட்ன  211810
ரமேஷ் மென்டிஸ்பிடி – பிடி – டேவிட் மில்லர்நுவான் துஷார171011
நசீம் ஷாRun Out 010200
லக்ஷான் சண்டகன்     
மதீஷ பத்திரன      
உதிரிகள்  03   
ஓவர்  20விக்கெட்  07மொத்தம்146   
பந்துவீச்சாளர்ஓ.ஓட்டவிக்
திசர பெரேரா01000700
மஹீஸ் தீக்ஷண04002101
டில்ஷான் மதுசங்க04002302
நுவான் துஷார04003701
டுனித் வெல்லாளகே03000902
சொஹைப் மலிக் 04003801

யாழ் அணி

1 திஸர பெரேரா, 2 நிஷான் மதுஷ்க 3 ரஹ்மனுள்ள குர்பாஸ், 4 டுனித் வெல்லாளகே, 5 மஹீஸ் தீக்ஷண, 6 சொஹைப் மலிக்  7 நுவான் துஷார 8 சரித் அஸலங்க 9 டேவிட் மில்லர்  10 டில்ஷான் மதுசங்க 11 தௌஹித் ரிதோய்   

கொழும்பு அணி –

1 லஹிரு உதார  2 பாபர் அஸாம், 3 பத்தும் நிஸ்ஸங்க, 4 நுவனிது பெர்னாண்டோ, 5 மொஹமட் நவாஸ், 6 இப்திகார் அஹமட் 7 சாமிக்க கருணாரட்ன, 8 ரமேஷ் மென்டிஸ், 9 லக்ஷான் சண்டகன், 10 நசீம் ஷா, 11 மதீஷ பத்திரன 

Social Share

Leave a Reply