காய்ச்சல் நீடித்தால் உடனடியாக வைத்தியரை அணுகவும்!

நிலவும் வெப்பமான காலநிலையுடன், சளி, இருமல் மற்றும் ஆஸ்துமா போன்ற அறிகுறிகளை உள்ளடக்கிய காய்ச்சல் பரவும் என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.  

இந்த நாட்களில் காய்ச்சல் பரவி வருவதாகவும், மக்கள் விழிப்புடன் இருக்கும்படியும் மக்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. 

இது குறித்து வைத்தியர் தீபால் பெரேரா,  ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு செவ்வியளித்துள்ளார். 

குறித்த செவ்வியில், இந்த நாட்களில் மக்கள், குறிப்பாக குழந்தைகள் நோய்வாய்ப்படுவதற்கான காரணம் வெப்பமான வானிலை மற்றும் பருவகால இன்ஃப்ளூயன்ஸா வைரஸ் காரணமாக இருக்கலாம்.

எனவே, இரண்டு வாரங்களுக்கு மேல் இருமல் நீடித்தால் உடனடியாக மருத்துவ ஆலோசனையைப் பெறுமாறு மக்களுக்கு அறிவுறுத்துகிறோம். மேலும், தற்போதைய வெப்பமான காலநிலையில் குழந்தைகள் நீரிழப்பு மற்றும் வெப்ப அதிர்ச்சியால் பாதிக்கப்படுவதைத் தடுக்க போதுமான கனிமங்களுடன் கூடிய திரவங்களை அதிக அளவில் வழங்குமாறு பொதுமக்களையும் பெற்றோர்களையும் கேட்டுக்கொள்கின்றோம்” எனத் தெரிவித்துள்ளார். 

இதேவேளை, வயோதிபர்கள் மற்றும் கர்ப்பிணித் தாய்மார்கள், பொதுவான நோய்களைத் தடுக்கும் வகையில், நெரிசலான இடங்களில் முகக்கவசம் அணியுமாறு, GMOA ஊடகப் பேச்சாளர் வைத்தியர் சமில் விஜேசிங்க பரிந்துரைத்துள்ளார்.  

மேலும், டெங்கு மற்றும் இன்புளுவன்சா வைரஸ் பரவி வருவதால், 48 மணி நேரத்திற்கும் மேலாக காய்ச்சல் நீடித்தால், மக்கள் மருத்துவ சிகிச்சை பெற வேண்டும்” என்று வைத்தியர் விஜேசிங்க வலியுறுத்தினார். 

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version