கல்முனையில் கொத்தமல்லியுடன் கந்தகத்தூள் கலந்து விற்பனை!

உணவிற்கு பயன்படுத்தப்படும் கொத்தமல்லியுடன் கந்தகத்தூள் கலந்து விற்பனை செய்த நபர் ஒருவர் மட்டகளப்பு, கல்முனை பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார்.

நிறையை அதிகரிப்பதற்காக கொத்தமல்லியுடன் இரசாயனங்கள் கலந்திருப்பதை பொலிஸார் உறுதி செய்துள்ளனர்.

இரகசிய தகவலுக்கு அமைய, பொலிஸ் விசேட அதிரடிப்படையின், திருக்கோவில் முகாமை சேர்ந்த அதிகாரிகள் குழு மற்றும் அம்பாறை நுகர்வோர் அதிகாரசபை அதிகாரிகள் குழு நேற்று (08.08) இரவு இந்த சுற்றிவளைப்பை மேற்கொண்டுள்ளனர்.

இதன்போது கல்முனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓல்ட் சீஷோர் வீதி பகுதியில் இயங்கிவந்த களஞ்சியசாலையில், நுவர்வோர் பாவனைப் பொருட்களில் இரசாயணங்கள் கலந்திருப்பது கண்டுப்பிடிக்கப்பட்டது.

இதனையடுத்து அந்த களஞ்சியசாலைக்கு பொறுப்பான 44 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சோதனையின் போது சந்தேகநபர் விற்பனைக்காக வைத்திருந்த கிடங்கில் இருந்து 2,125 கிலோ கந்தகத்தூள் கலந்த 2,125 கிலோ மல்லி, 8,275 கிலோ தரமற்ற கொத்தமல்லி, 225 கிலோ கந்தக தூள் ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டன.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அம்பாறை நுகர்வோர் அதிகாரசபை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version