வவுனியாவில் காணிகள் தொடர்பில் கலந்துரையாடல்!

வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட வனவள திணைக்களத்தின் பொறுப்பிலுள்ள காணிகள் தொடர்பான கலந்துரையாடல் ஒன்று நெடுங்கேணி பிரதேச செயலகத்தில் இன்று (10.08) இடம்பெற்றது.

.வவுனியா மாவட்ட செயலாளர் P. A.சரத்சந்ர தலைமையில் நடைபெற்ற இந்த கலந்துரையாடலில், வவுனியா மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரேஷ் குமார், வவுனியா வடக்கு பிரதேச செயலாளர், வவுனியா வடக்கு பிரிவிற்குட்பட்ட கிராம அலுவலகர்கள், வனவள அதிகாரிகள், நிலவள அதிகாரிகள் என பலர் பங்கேற்றிருந்தனர்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version