போலி விசா மூலம் டுபாய் வழியாக பிரான்ஸ் செல்ல முற்பட்ட இலங்கை இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
உகண்டா பெண்ணொருவருக்கு 35 இலட்சம் ரூபாவை கொடுத்து போலியான விசாவை பெற்றுக்கொண்டு அவர் தப்பிச் செல்ல முயன்றது விசாரணைகளின் போது கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் தொர்பில் மாத்தறை பிரதேசத்தில் வசிக்கும் 24 வயதுடைய இளைஞர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து குடிவரவு குடியகல்வு எல்லை அமலாக்கப் பிரிவின் அதிகாரிகள் குழுவினால் கைது செய்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இவர் இரண்டு மாதங்களுக்கு முன்பு உகாண்டா சென்று அங்குள்ள கசினோ கிளப் ஒன்றில் பணிபுரிந்துள்ளார். இதன்போது குறித்த உகாண்டா பெண்ணை சந்தித்ததாகவும், அவர் போலி விசாவை தயார் செய்ய முன்வந்ததாகவும், அந்த இளைஞர் அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.