ஹவாய் காட்டுத்தீ – 53 பேர் பலி!

ஹவாயில் காட்டுத் தீயில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 53 ஆக அதிகரித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மேலும், சுமார் ஆயிரம் பேர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும என ஹவாய் ஆளுநர் ஜோஷ் கிரீன் தெரிவித்துள்ளார்.

காட்டுத் தீ நிலைமை ஹவாயின் வரலாற்றுப் பகுதியான லஹைனாவையும் கடுமையாக பாதித்துள்ளது, மேலும் இது தற்போது 80% கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.

காட்டுத்தீ காரணமாக ஹவாயில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர், கிட்டத்தட்ட 11,000 பேர் மின்சாரம் இல்லாமல் உள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version