இலங்கையில் தற்போது நாளொன்றுக்கு முட்டை உற்பத்தி சுமார் 500,000ஆக அதிகரித்துள்ளதாக அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர் சரத் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக அடுத்த வார ஆரம்பத்தில் முட்டையொன்றை 45 ரூபா முதல் 46 ரூபாவரை விற்பனை செய்ய முடியும் என் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் இவ்வாறு முட்டை உற்பத்தி அதிகரிப்பதால், எதிர்வரும் டிசெம்பர் மாதத்திற்குள் நாட்டின் முட்டை உற்பத்தி மேலும் அதிகரிக்கும் எனவும் , எனவே சந்தையில் முட்டையொன்றை 25 ரூபா முதல் 30 ரூபாவரை மக்கள் கொள்வனவு செய்ய முடியும் எனவும், அவர் மேலும் தெரிவித்தார்.