வவுனியாவில் களமிறக்கப்பட்ட விசேட அதிரடிப்படையினர்!

 
வவுனியாவில் வாள்களுடன் அட்டகாசம் புரிந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் நேற்று (11.08) தெரிவித்துள்ளனர்.

வவுனியா, வைரவபுளியங்குளம், யங்ஸ்ரார் விளையாட்டு மைதானத்தின் முன் நின்ற இளைஞர்கள் மீது புதன் கிழமை மாலை சிலர் வாள்வெட்டு தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். 

இதன்போது நிலமையை கட்டுப்படுத்த முயன்ற புலனாய்வு துறையைச் சேர்ந்த ஒருவர் மீதும் வாள் வீசி தாக்குதல் மேற்கொள்ள முயற்சிக்கப்பட்டது.

இந்நிலையில் சம்பவ இடத்திற்கு பொலிஸார் வந்ததும், வாள்களுடன் நின்றவர்கள் தப்பிச் சென்றுள்ளனர்.

இதனையடுத்து, குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த விசேட அதிரடிப்படையினர், குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய தேக்கவத்தை பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவரை கைது செய்து வவுனியா பொலிசில் ஒப்படைத்தனர்.

மற்றொரு நபர்,  வவுனியா பொலிசில் சரணடைந்துள்ளார். சரணடைந்தவர் தவசிகுளம் பகுதியைச் சேர்ந்தவராவார். மேலும் சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இதேவேளை இச் சம்பவத்தையடுத்து விசேட அதிரடிப் படையினர் வவுனியா வைவரவபுளியங்குளம் பகுதியில் விசேட கண்காணிப்பு நடவடிக்கையிலும் ஈடுபட்டுள்ளனர்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version