போலி வீசாவுடன் இலங்கை இளைஞர் ஒருவர் பிரான்சுக்கு தப்பிச் செல்ல முற்பட்ட வேளையில் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கைது செய்யப்பட்ட இளைஞன் இளைஞன் உகாண்டா பெண் ஒருவருக்கு ரூ. 3.5 மில்லியன் கொடுத்து, துபாய் வழியாக பிரான்சுக்கு செல்லும் நோக்கத்துடன் குறித்த போலி விசாவைப் பெற்றுள்ளார்.
கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட குறித்த சந்தேக நபர் 24 வயதுடைய மாத்தறை பகுதியை சேர்ந்த ஒருவர் என தெரியவந்துள்ளது. இளைஞன் கொழும்பில் உள்ள கசினோ ஒன்றில் பணிபுரிந்து வந்ததுடன், அவர் சந்தித்த உகாண்டா பெண் ஒருவர் பிரான்சுக்கு செல்வதற்காக போலி ஆவணங்களை உருவாக்க உதவியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த இளைஞன் தனது பெற்றோருக்கு சொந்தமான காணி மற்றும் நகைகள் மற்றும் மோட்டார் சைக்கிளை விற்று போலி விசாவிற்கு தேவையான பணத்தை சேகரித்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது,.