இலங்கையில் நிலத்தின் கீழ் கட்டப்பட்டுள்ள உணவகம்!

போகல கிராபைட் சுரங்கத்தின் தரை மட்டத்திலிருந்து 124 மீற்றர் ஆழத்தில் உணவு விடுதி ஒன்று கட்டப்பட்டுள்ளது. 

குறித்த உணவு விடுதியின் சாப்பாட்டு அறையில் ஒரே நேரத்தில் 15 பேர் அமர்ந்து சாப்பிடும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. 

போகலா கிராபைட் சுரங்கம் என்று அழைக்கப்படும் இந்த சுரங்கம் விஜயபால மலலசேகர சுரங்கத்தில்  கட்டப்பட்டுள்ளது. 

இந்த கிராஃபைட் சுரங்கத்தை பார்வையிட சிறப்பு அனுமதி பெற வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளதுடன், 14 வயதுக்குட்பட்ட குழந்தைகள் நுழைய அனுமதிக்கப்படுவதில்லை.

150 ஆண்டுகளுக்கும் மேலான பழமையான போகல கிராபைட் சுரங்கத்திலிருந்து கிராஃபைட் ஏற்றுமதி செய்யப்படுவதுடன், இந்நாட்டிற்கு கணிசமான அந்நியச் செலாவணியை ஈட்டித் தந்துள்ளது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version