சமூக வலைத்தளங்களான பேஸ்புக், வட்ஸ்ஆப், இன்ஸ்டகிராம் ஆகியவற்றின் தாய் நிறுவனமாக மெட்டா எனும் நிறுவனம் உருவாக்கப்பட்டுள்ளது.
பேஸ்புக் நிறுவனமாகவே இவ்வளவு காலமும் இயங்கி வந்த நிறுவனம், தற்போது தாய் நிறுவனம் ஒன்றை நிறுவி அதன் கீழ் குறிப்பிட்ட சமூக வலய செயலிகளை இயக்கவுள்ளது.
நேற்று இந்த நிறுவனம் உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.நிறுவனத்தின் தலைவர் மார்க் ஸக்கர்பேர்க் இதனை அறிவித்துள்ளனர்.
“மெட்ராவேர்ஸ்”, இணைய வழி உலகம் ஒன்றை ஆரம்பித்து அதனூடாக கேம்ஸ் விளையாடுதல், வேலை செய்தல், தொடர்பாடல்களை செய்தல் போன்ற செயற்பாடுகளை ஆரம்பிக்க உள்ளதாகவும் ஸக்கர்பேர்க் தெரிவித்துள்ளார்.
இந்த நிறுவனத்தினூடாக எதிர்காலத்திற்கு தேவையான பல புதிய செயற்திட்டங்களை ஆரம்பிக்கவுள்ளதாகவும், ஸக்கர்பேர்க் மேலும் தெரிவித்தார்.