சசித்ரவுக்கு வெளிநாடு செல்ல தடை!

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சசித்ர சேனாநாயக்கவுக்கு வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

சந்தேகத்திற்கிடமான ஆட்ட நிர்ணய சம்பவம் தொடர்பான விசாரணை தொடர்பில் கொழும்பு நீதவான் நீதிமன்றம் இந்த தடை உத்தரவை பிறப்பித்துள்ளது.

2020 LPL தொடரின் முதற்கட்ட போட்டியின்போது டுபாயில் இருந்து தொலைபேசி வாயிலாக இரண்டு வீரர்களை ஆட நிர்ணயத்தில் ஈடுபட தூண்டியதாக இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சசித்ர சேனாநாயக்கவுக்கு எதிராக போதிய சாட்சியங்கள் கிடைத்துள்ளதாக சட்டமா அதிபர் திணைக்களம் விளையாட்டுத்துறை அமைச்சின் விசேட புலனாய்வுப் பிரிவிற்கு அறிவித்துள்ளது. .

இதன்படி, அவருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வது தொடர்பில் விளையாட்டுத்துறை அமைச்சின் விசேட விசாரணைப் பிரிவுக்கு சட்டமா அதிபர் திணைக்களம் சில அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சசித்ரவுக்கு வெளிநாடு செல்ல தடை! இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சசித்ர சேனாநாயக்கவுக்கு வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. சந்தேகத்திற்கிடமான ஆட்ட நிர்ணய சம்பவம் தொடர்பான விசாரணை தொடர்பில் கொழும்பு நீதவான் நீதிமன்றம் இந்த தடை உத்தரவை பிறப்பித்துள்ளது. 2020 LPL தொடரின் முதற்கட்ட போட்டியின்போது டுபாயில் இருந்து தொலைபேசி வாயிலாக இரண்டு வீரர்களை ஆட நிர்ணயத்தில் ஈடுபட தூண்டியதாக இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சசித்ர சேனாநாயக்கவுக்கு எதிராக போதிய சாட்சியங்கள் கிடைத்துள்ளதாக சட்டமா அதிபர் திணைக்களம் விளையாட்டுத்துறை அமைச்சின் விசேட புலனாய்வுப் பிரிவிற்கு அறிவித்துள்ளது. . இதன்படி, அவருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வது தொடர்பில் விளையாட்டுத்துறை அமைச்சின் விசேட விசாரணைப் பிரிவுக்கு சட்டமா அதிபர் திணைக்களம் சில அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Social Share

Leave a Reply