இத்தாலிய பெண் ஒருவரை துஷ்பிரயோகம் செய்ய முயன்ற இலங்கையர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
37 வயதுடைய இலங்கையர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
வேலைக்குச் சென்று கொண்டிருந்த பெண்ணை சந்தேக நபர் துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
25 வயதுடைய பெண் சந்தேக நபரால் பூங்கா ஒன்றுக்கு இழுத்துச் செல்லப்பட்டதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
அத்துடன் குறித்த பெண் கூச்சலிட்ட நிலையில், அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அந்த பகுதிக்கு வருகை தந்ததாகவும், இதனையடுத்து சந்தேக நபர் அங்கிருந்து தப்பிச் செல்ல முயற்சித்தாகவும் கூறப்படுகிறது.
எவ்வாறாயினும் சந்தேக நபரை கைது செய்துள்ள பொலிஸார் விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.