அத்தியாவசிய சேவைகளாக இலங்கை துறைமுக அதிகாரசபை, புகையிரத திணைக்களம், சகல பிரதேச செயலகங்கள், மத்தியவங்கி, தபால் திணைக்களம், உள்ளூராட்சி திணைக்களங்கள், கூட்டுறவு சங்கங்கள், அரச வங்கிகள் ஆகியவை பிரகடனப்படுத்தப்பட்டு அதி விசேட வர்த்தமானி மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட துறைகளை சேர்ந்த திணைக்களங்களும், அதன் கிளை நிறுவனங்களும் மக்களுக்கான அவசர சேவைகளை தடையின்றி வழங்க வேண்டுமென வெளியிடப்பட்ட விசேட வர்த்தமானி அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் பரிந்துரைக்கு அமைய ஜனாதிபதியின் செயலாளர் P.B ஜயசுந்தர இந்த வர்த்தமான அறிவித்தலை வெளியிட்டுள்ளார்.