கொழும்பில் ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது!

பேலியகொட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வனசல பிரதேசத்தில் ஐஸ் போதைப் பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வடமேல் மாகாண குற்றத்தடுப்பு பிரிவினரால் நேற்று (06.08) மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

களனி, திப்பிட்டிகொட பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் இருந்து 1 கிலோ 6 கிராம் ஐஸ் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபர் இன்று (16.08) அளுத்கடை நீதவான் நீதிமன்ற இலக்கம் 5 முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளார். மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்பு பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version