தாகத்தால் வாடும் விலங்குகளை விஷம் வைத்துக் கொல்லும் மர்ம நபர்கள்!

தாகத்தால் வாடும் விலங்குகளுக்கு விஷம் வைத்து கொன்று இறைச்சிக்காக விற்கும் மோசடி ஒன்று செல்லக்கதிர்காமம் பிரதேசத்தில்நடைபெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

செல்லகதிர்காமம் எல்லைக்குட்பட்ட யால காப்புப் பிரதேசத்தில் வேட்டையாடுபவர்கள் நீர்நிலைகள் மற்றும் ஏரிகளுக்கு அருகில் குழிகள் அமைத்து அதில் விஷம் கலந்து இச்செயலை மேற்கொண்டுள்ளதாக வனவிலங்கு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு விலங்குகளை வேட்டையாடி விலங்குகளின் இறைச்சியை கதிர்காமத்திற்கு வந்து செல்லும் மக்களுக்கும் பல்வேறு பிரதேசங்களுக்கும் விற்பனை செய்து வந்ததாக கூறப்படுகிறது.

குறிப்பாக கதிர்காம யாத்திரைக்கு வரும் யாத்திரிகர்களுக்கு தேவையான இறைச்சியை வழங்குவதற்காகவும் அவர்களை இலக்கு வைத்தே குறித்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

விஷ விலங்குகளின் இறைச்சியை விற்பனை செய்வதன் மூலம் மனித உயிருக்கும் ஆபத்து ஏற்படுவதாக வனவிலங்கு அதிகாரிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இவ்வாறு உயிரிழந்த விலங்குகளின் சடலங்கள் பலவற்றை வனவிலங்கு அதிகாரிகள் கண்டுப்பிடித்துள்ள போதிலும்,குறித்த நடவடிக்கையில் ஈடுபட்ட சந்தேக நபர்களை கைது செய்ய முடியவில்லை எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version