கொரோனா தடுப்பூசி அட்டைகள் – சட்ட துறையை நாடும் அரசு

கொரோனா தடுப்பூசிகளை வெளியே எடுத்து செல்வது கட்டாயமாக்குவது தொடர்பில் அரசாங்கம் சட்ட துறையின் ஆலோசனையை கோரியுள்ளது.
கொவிட் செயலணி சட்டமா அதிபர் திணைக்களத்திடம் இந்த விடயத்தை நடைமுறைப்படுத்தல் தொடர்பிலான சட்ட ஆலோசனை அல்லது சட்டத்தை அறிமுகம் செய்தல் தொடர்பிலேயே இந்த ஆலோசனையை கோரியுள்ளது.
நேற்று பொது இடங்களிற்கு செல்வதற்கு தடுப்பூசி அட்டைகளை வைத்திருப்பது அவசியமென கொவிட் செயலணி கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. இருப்பினும் தடுப்பூசிகள் போடாதவர்கள் தொடர்பில் சட்ட சிக்கல் உள்ளமையினால் அதனை அமுல் செய்வதில் சிக்கல் நிலை உள்ளதாக மருத்துவ துறையினை சேர்ந்தவரக்ள் கூறியதனை தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சட்டமா அதிபர் திணைக்களத்தின் ஆலோசனையின் படியே இந்த தடுப்பூசி அட்டைகளை நடைமுறைப்படுத்தல் தொடர்பில் முடிவெடுக்கப்படுமென நம்பப்படுகிறது.

கொரோனா தடுப்பூசி அட்டைகள் - சட்ட துறையை நாடும் அரசு
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version