இளைஞர் தினத்தை முன்னிட்டு கரப்பந்தாட்டப் போட்டி!

சர்வதேச இளைஞர் ஆகஸ்ட் 12ஆம் திகதி சர்வதேச ரீதியாக அனுஷ்டிக்கப்படுகிறது. அதற்கிணங்க காத்தான்குடி மற்றும் ஏறாவூர் நகர் பிரதேச இளைஞர் கழக உறுப்பினர்களுக்கு இடையிலான கரப்பந்தாட்டப் போட்டித் தொடர் (13.08) ஏறாவூர் அலிகார் தேசிய பாடசாலை மைதானத்தில் இடம்பெற்றது.

இதில் ஏறாவூர் நகர இளைஞர் கழக சம்மேளனத்தின் அல்-பாஸி இளைஞர் கழகம் முதலாம் மற்றும், காத்தான்குடி சமூக மேம்பாட்டு இளைஞர் கழகம் (SSYC) இரண்டாம் இடங்களைப் பெற்றுக் கொண்டன.

இப் போட்டித் தொடரில் முதலாம் இடத்தினைப் பெற்ற அணிக்கான வெற்றிக் கிண்ணம் மற்றும் விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டதுடன் 2ஆம், 3ஆம், 4ஆம் இடங்களைப் பெற்ற அணிகளுக்கான விளையாட்டுப் பொருட்களும் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில் வொயிஸ் ஒப் ஏறாவூர் அமைப்பின் தலைவர் எம். ஐ. எம். தஸ்லீம் கலந்து சிறப்பித்திருந்தார்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version