வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

தற்போதைய வறட்சியான காலநிலையினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 190,000 ஐ எட்டியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

குறிப்பாக வறட்சியான காலநிலை காரணமாக 15 மாவட்டங்கள் மற்றும் 52 பிரதேச செயலகப் பிரிவுகளைச் சேர்ந்த மக்கள் குடிநீர் தட்டுப்பாட்டுக்கு முகம் கொடுக்க வேண்டியுள்ளதாக அந்த நிலையம் சுட்டிக்காட்டியுள்ளது.

இதன்படி, 54,979 குடும்பங்களைச் சேர்ந்த 183,038 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வடமாகாணத்தில் மாத்திரம் 75,287 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களில் 70,238 பேர் யாழ்ப்பாண மாவட்டத்தில் வசிப்பவர்கள் எனவும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, குடிநீர் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்ட 52,400 குடும்பங்களுக்கு குடிநீர் வழங்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்க தெரிவித்துள்ளார்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version