ஹில்டன் யால விடுதி ஜனதிபதியால் திறந்துவைக்கப்படவுள்ளது!

பலதுபான யால வனவிலங்கு சுற்றுலா வலயத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட சொகுசு ஹோட்டலான ஹில்டன் யால ரிசார்ட் ஆகஸ்ட் 19 ம் திகதி சனிக்கிழமை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் திறந்து வைக்கப்படவுள்ளது.

இந்த ஹோட்டல் மெல்வா ஹோட்டல் நிறுவனத்தால் 16 மில்லியன் அமெரிக்க டாலர் முதலீட்டில் கட்டப்பட்டுள்ளது என அதன் உரிமையாளர் முருகநாதன் பிள்ளை தெரிவித்துள்ளார்.

ஹில்டன் யால ரிசார்ட் 42 குடும்பங்கள் தாங்கக்கூடிய வில்லாக்கள், அறைகள் மற்றும் ஒவ்வொரு அறைகளுக்குமான தனித்தனி நீச்சல் தடாகங்கள், ஸ்பா மற்றும் தனித்துவமான உணவு அனுபவங்களைக் கொண்டுள்ளது.

ஹில்டன் யால ரிசார்ட் தவிர, மெல்வா குழுமம் 141 அறைகளைக் கொண்ட ஹோட்டல் ஒன்றை நீர்கொழும்பு அமைத்துள்ளது, மேலும் கண்டி, கொஸ்கொட, நுவரெலியா மற்றும் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலைய பகுதி போன்ற இடங்களில் ஹில்டன் ஹோட்டல்களை நிர்மாணிப்பதற்கான ஒப்பந்தங்களிலும் கையெழுத்திட்டுள்ளது.

Social Share

Leave a Reply