35 முதல் 45 வயதுக்குட்பட்ட அனைத்து பெண்களும் கர்ப்பப்பை வாய் மற்றும் மார்பகப் புற்றுநோயைக் கண்டறிவதற்காக தங்கள் சுகாதாரப் பகுதியில் உள்ள சுவனாரி கிளினிக்குகளுக்குச் சென்று பரிசோதனை செய்யுத்துக்கொள்ளுமாறு சுகாதாரத்துறை கேட்டுக்கொண்டுள்ளது.
பெண்களை தாக்கும் புற்றுநோய் தொடர்பில் சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நேற்று (16.08) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட குடும்ப சுகாதார பணியகத்தின் சமூக மருத்துவ நிபுணர் பத்மக டி சில்வா மேற்படி கேட்டுக்கொண்டுள்ளார்.
“பெண்களிடையே மிகவும் பொதுவான புற்றுநோய்களான கர்ப்பப்பை வாய் மற்றும் மார்பக புற்றுநோய், உணவுக்குழாய் புற்றுநோய் உள்ளிட்டவற்றை கண்டறிய 35 மற்றும் 45 வயதுக்கு உட்பட்ட பெண்கள் கிளினிக்குகளுக்குச் செல்லுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும் இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் இந்திக்க டி சில்வா, “மாதவிடாய் முடிந்த 7 அல்லது 10வது நாட்களில் அனைத்துப் பெண்களும் மார்பக சுயபரிசோதனை செய்து கொள்ளலாம்.
இன்றும் கூட இரண்டாவது அல்லது மூன்றாவது கட்டத்தில் புற்றுநோய் கண்டறியப்பட்டு மிகவும் தீவிரமடையும் நிகழ்வுகளை நாம் காண்கிறோம். இன்றும் பெண்கள் இதில் போதிய கவனம் செலுத்துவதில்லை” எனக் கூறியுள்ளார்.