ஈரானின் ஷிராஸில் உள்ள ஷாஹ்-இ-ஷெராக்(Shah-e-Cheragh) மசூதி தாக்கப்பட்ட செய்தியைக் கேட்டு நாங்கள் மிகுந்த வருத்தமும் அதிர்ச்சியும் அடைந்தோம் என ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலார் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில், ”இந்த கோழைத்தனமான பயங்கரவாதச் செயலால் இரண்டு அப்பாவி குடிமக்கள் உயிரிழந்ததுடன் பலர் காயமடைந்துள்ளனர்.
இந்தத் தாக்குதலை நாங்கள் மிகவும் வெறுக்கத்தக்க வகையில் கண்டிப்பதோடு,உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கும் ஈரானிய மக்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
இந்த தாக்குதல் பயங்கரவாதத்தின் ஆபத்துகள் குறித்தும் இந்த கொடுமைக்கு எதிராக போராடுவதற்கு அனைத்து நாடுகளும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டியதன் அவசியத்தையும் இது நினைவூட்டுகிறது” எனத் தெரிவித்துள்ளார்.