வவுனியா மாணவர்களில் மரணம் தொடர்பில் அறிக்கை வேண்டும் – வடமாகாண ஆளுநர் உத்தரவு!

பாடசாலைகளுக்கான வலய மட்ட விளையாட்டுப் போட்டியில் பங்குபற்றிய பாடசாலை மாணவர்கள் பாதுகாப்பற்ற விவசாயக் கிணற்றில் விழுந்து உயிரிழந்தமை தொடர்பில் உடனடியாக முறையான விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் மாகாண கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களத்தின் வவுனியா ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

வவுனியா பம்பைமடு பல்கலைக்கழக விளையாட்டு மைதானத்தில் நேற்று (17.08) இடம்பெற்ற வலய மட்ட விளையாட்டுப் போட்டியில் கலந்து கொண்ட 14 மற்றும் 15 வயதுடைய இரண்டு சிறுவர்கள் பாதுகாப்பற்ற விவசாய கிணற்றில் விழுந்து உயிரிழந்தமைக்கு வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் தமது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.

வவுனியா முஸ்லிம் பாடசாலையில் கல்வி கற்கும் இவ்விரு மாணவர்களும் விளையாட்டுப் போட்டியின் போது பல்கலைக்கழக விளையாட்டு மைதானத்திற்கு அருகில் இருந்த விவசாய கிணற்றில் தவறி விழுந்து நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

சடலங்களின் பிரேதப் பரிசோதனைகள் இடம்பெற்று வருவதுடன், வவுனியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version