மேற்கு கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள கெலோவ்னா நகரில் காட்டுத் தீ பரவியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதன்காரணமாக கெலோவ்னா நகருக்கு அருகில் வசிக்கும் 30,000க்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.
கனடாவில் காட்டுத் தீ பரவிய புதிய நகரமாக கெலோவ்னா நகரம் மாறியுள்ளது. இதனிடையே கனடாவில் ஏற்பட்ட காட்டுத் தீயினால் இலட்சக்கணக்கான ஏக்கர் நிலங்கள் அழிவடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.