நாட்டில் பெரிய வெங்காயச் செய்கை தொடர்பில் உடனடியாக அறிக்கை வழங்குமாறு விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர விவசாய திணைக்களத்திற்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
தற்போது ஏழெட்டு வருடங்களாக வெற்றிகரமான பெரிய வெங்காயச் செய்கை தோல்வியடைந்துள்ளதாகவும், தற்போது விவசாயிகள் பெரிய வெங்காயச் செய்கையைக் கைவிட்டதாகத் தகவல்கள் வெளியாகி வருவதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதன் பிரகாரம், பெரிய வெங்காயச் செய்கை தொடர்பிலான அறிக்கையை தமக்கு வழங்குமாறு விவசாயத் திணைக்களத்திற்கு அமைச்சர் பணிப்புரை விடுத்துள்ளார்.
இலங்கையின் வருடாந்த வெங்காயத் தேவை 300,000 மெற்றிக் தொன் எனவும், தேசிய உற்பத்தி 4716 மெற்றிக் தொன் என்பதால் இவ்வருடத்தில் இறக்குமதி செய்யப்பட்ட வெங்காயத்தின் அளவு 131,795 மெட்ரிக் தொன் எனவும் விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.