தோட்ட தொழிலாளர் வீடுடைப்பு- அமைச்சர் ஜீவன் ஆவேசம்.

மக்களுக்காக, தோட்ட நிர்வாகத்தினரை தாக்க முயன்ற ஆவேசமடைந்த அமைச்சர் ஜீவன்.

மாத்தளை மாவட்ட ரத்வத்தை தோட்டத்தில், தோட்ட நிர்வாகத்தை சேர்ந்த சிலர் தமிழ் தொழிலாளர் ஒருவரது வீட்டை உடைத்து சொத்துகளை சேதப்படுத்திய சம்பவம் ஒன்று நடைபெற்றது. இந்த சம்பவம் நடைபெற்ற இடத்துக்கு சென்ற தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சர் ஜீவன் தொண்டமான் தோட்ட நிர்வாகத்தினருடன் கடுமையாக வாக்குவாதத்தில் ஈட்பட்டிருந்தார். வாக்குவாதம் முற்றிய நிலையில் அவர் குறித்த தோட்ட நிர்வாக முக்கியஸ்தரை ஆவேசமாக தாக்க முயன்ற போதும் அங்கிருந்தவர்களினால் தடுக்கப்பட்ட அதேவேளை, தோட்ட நிர்வாகத்தை சேர்ந்தவர் அந்த இடத்தில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டார்.

இந்த சம்பவத்தின் போது பாராளுமன்ற உறுப்பினர் மருதுபாண்டி ரமேஸ்வரனும் குறித்த தோட்ட நிர்வாகத்தை சேர்ந்தவருடன் முரண்பட்டிருந்தார்.

உடைக்கப்பட்ட வீட்டுக்கு பதிலாக புதிய வீட்டை நிர்மாணித்துக்கொடுக்க நிர்வாகம் இணக்கம் தெரிவித்துள்ளதாகவும், தோட்ட இளைஞர்களுக்கு பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியம் ஊடாக சுயதொழில் வாய்ப்பு வழங்க இணக்கம் காணப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Social Share
FacebookTwitterLinkedinWhatsappInstagramViberTelegramFacebook MessengerGmailPinboardSkype
FacebookTwitterRedditLinkedinPinterestMeWeMixWhatsapp

Leave a Reply Cancel reply

Exit mobile version