மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சிறிதளவு மழை பெய்யகூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் மாலை அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் எனவும், நாட்டின் ஏனைய பகுதிகளில் முக்கியமாக மழை இல்லாத வானிலை நிலவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய மலையகத்தின் மேற்கு சரிவுகளிலும், வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை ஹம்பாந்தோட்டை மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் அவ்வப்போது காற்றின் வேகம் அதிகரித்து காணப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.