எதிர்வரும் காலங்களில் சந்தையில் அரிசியின் விலை சற்று அதிகரிக்க கூடும் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
அம்பலாந்தோட்டை நெல் ஆராய்ச்சி நிறுவனத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டபோதே அவர் இதனைக் தெரிவித்துள்ளார்.
வறட்சி காரணமாக சுமார் 100,000 ஏக்கர் நெற்செய்கை அழிவடைந்துள்ள போதிலும் எதிர்காலத்தில் அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்படாது எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
அரிசி சந்தைப்படுத்தல் சபை நெல் கொள்வனவுகளை ஆரம்பித்துள்ளதாகவும், ஆனால் விவசாயிகள் நெல் சந்தைப்படுத்தல் சபைக்கு அரிசி வழங்காததன் காரணமாக அரசாங்கத்திடம் மேலதிக அரிசி அல்லது நெல் இருப்புக்கள் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், தனியார் வசம் கையிருப்பு இருப்பதால், அரிசியின் விலை உயரும் பட்சத்தில், அதனை சமாளித்து, நுகர்வோரை பாதுகாக்கும் வேலைத்திட்டத்தை அரசாங்கம் நடைமுறைப்படுத்த வேண்டுமென விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர மேலும் தெரிவித்துள்ளார்.