ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரில் பங்குபற்றவுள்ள இந்தியா அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. அஜித் அகர்கார் தலைமையிலான தெரிவுக்குழு இந்த அணியை தெரிவு செய்துள்ளது. மேற்கிந்திய தொடரில் ஓய்வு வழங்கப்பட்டிருந்த மொஹமட் ஷமி மீண்டும் அணியில் இணைக்கப்பட்டுள்ளார். உபாதைகளிலிருந்து மீண்ட லோகேஷ் ராகுல் மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் மீண்டும் அணிக்குள் இடம் பிடித்துள்ளனர். இவர்கள் இருவரில் ஒருவர் நான்காமிடத்தை நிரப்புகை செய்வார்கள் என எதிர்பார்க்கபப்டுகிறது. இஷன் கிஷன் இடதுகர துடுப்பாட்ட வீரராக காணப்படுவதனால் அவர் விளையாடும் பதினொருவரில் சேர்க்கப்படும் வாய்ப்புள்ளது. சூர்யகுமாயின் இடம் ஒரு நாள் சர்வதேசப் போட்டிகளில் நிரந்தமில்லாமல் காணப்படுகிறது.
திலக் வர்மா அணியில் இடம்பிடித்துள்ளமை முக்கியமான விடயமாக சுட்டிக்காட்டத்தக்கது. அவர் அணியோடு பயணிப்பது அவருக்கான அனுபவத்தை வழங்குமென அகர்கார் தெரிவித்துள்ளார். அயர்லாந்து தொடரில் தலைமை தாங்கும் ஜஸ்பிரிட் பும்ரா ஒரு நாள் அணிக்குள் மீண்டும் இணைக்கப்பட்டுள்ளார்.
உலகக்கிண்ணத்துக்கு முன்னர் ஆசிய கிண்ணம் நடைபெறும் நிலையில் உலகக்கிண்ணத்தில் விளையாடும் என எதிர்பார்க்கப்படும் அணியே தெரிவு செய்யப்பட்டுள்ளது. இந்த அணி ஆசிய கிண்ணத்தில் சுழற்ச்சி முறையில் விளையாடுமென எதிர்பார்க்கப்படுகிறது. ஆசிய கிண்ணம் உலகக்கிண்ணம் ஆகிய தொடர்களில் அணிகள் அதிக போட்டிகளில் விளையாட உள்ளமையினால் உபாதைகள் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளன. ஆகையால் அணிகள் வீரர்களை சுழற்சி முறையில் பாவிக்கவே முயற்சிக்கும்.
பந்துவீச்சாளர்களில் யுஸ்வேந்த்ரா செஹால் நீக்கப்பட்டுள்ளமை மட்டுமே முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. முழுமையான பலமான அணியை இந்த தொடருக்காக இந்தியா தெரிவு.செய்துள்ளது
பாக்கிஸ்த்தானின் ஏற்பாட்டில் ஆசிய கிண்ணம் பாகிஸ்தான் மற்றும் இலங்கை ஆகிய இடங்களில் இம்மாதம் 30 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கவுள்ளது. இந்தியா அணி விளையாடும் போட்டிகள் முழுமையாக இலங்கையில் விளையாடப்படவுள்ளது.
அணி விபரம்
ரோஹித் ஷர்மா, சுப்மன் கில், விராத் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், இஷன் கிஷன், ஹார்டிக் பாண்ட்யா, ரவீந்தர் ஜடேஜா, அக்ஷர் பட்டேல், ஜஸ்பிரிட் பும்ரா, மொஹமட் ஷமி, மொஹமட் ஷிராஜ், லோகேஷ் ராகுல், சூர்யகுமார் யாதவ், ஷர்த்தூள் தாகூர், ப்ரஸீத் கிருஷ்ணா, குல்தீப் யாதவ்.