நுவரெலியா வைத்தியசாலையின் வைத்தியர்கள், தாதியர்கள் மற்றும் சுகாதார ஊழியர்களுடன் அமைச்சர் ஜீவன் தொண்டமான் கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளார்.
வைத்தியசாலையின் செயற்பாடுகள், வளப்பற்றாக்குறையால் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை உள்ளிட்ட விடயங்கள் பற்றி அவர்களிடம் கேட்டறிந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மருந்து தட்டுப்பாடு மற்றும் அங்கு நிலவும் குறைப்பாடுகள் தொடர்பில் அதிகாரிகள் என்னிடம் எடுத்துரைத்தனர் எனக் கூறிய அவர், இவற்றை நிவர்த்தி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததுடன். இவ்விவகாரம் தொடர்பில் சுகாதார அமைச்சருடன் பேச்சு நடத்தவுள்ளதாகவும் கூறியுள்ளார்.