கொழும்பு, மொரட்டுவை பகுதியில் 10 பெண்கள் அடங்கலாக 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இரண்டு பொலிசாரை தாக்கிய சம்பவம் தொடர்பிலேயே இவரகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மாதாங்காவத்தை எனும் பகுதியில் விசாரணைக்காக சென்ற ஒரு பொலிஸ் கான்ஸ்சடபிழும், சாஜனுமே இவ்வாறு தாக்குதலுக்குள்ளாகியுள்ளனர். குறித்த இருவரும் கொழும்பு தேசிய வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் ஒருவர் அதி தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக கொழும்பு தேசிய வைத்தியசாலை அறிவித்துள்ளது.