சீனா செல்லும் டக்ளஸ் தேவானந்தா!

சீனாவில் நடைபெறவுள்ள சுற்றுசூழல் தொடர்பான மாநாட்டில் பல்வேறு நாடுகளின் அமைச்சர்களும் கலந்து கொள்ளவுள்ள நிலையில், குறித்த சந்தர்ப்பத்தினை இலங்கை கடற்றொழிலாளர்களுக்கு சார்பாக பயன்படுத்த எதிர்பார்த்துள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

கடற்றொழில் அமைச்சர் தன்னுடைய சீன விஜயம் தொடர்பாக கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும், குறித்த மாநாட்டில் இந்திய பிரதிநிதிகளும் கலந்துகொள்ள இருப்பதாக தெரிவிக்கப்படும் நிலையில், இந்தியா மற்றும் சீனா உட்பட பல்வேறு நாடுகளின் பிரதிநிதிகளுடன் ஒன்றாக கலந்துரையாடுவதற்கான சந்தர்ப்பத்தினை இந்த மாநாடு ஏற்படுத்தி தரவுள்ளதாகவும் தெரிவித்தார்.

அதேவேளை, நாட்டின் வளமான எதிர்காலத்திற்காக கிடைக்கின்ற சந்தர்ப்பங்களை சரியான முறையில் பயன்படுத்த வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.

குறித்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இன்று(22.08) சீனாவிற்கான உத்தியோகபூர்வ விஜயத்தினை ஆரம்பித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா எதிர்வரும் 26 ஆம் திகதி நாடு திரும்பவுள்ளார்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version