இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பாப்பரசர் பிரான்சிஸ் ஆகியோருக்குமிடையில் இன்று(30/10) சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது. இருவரும் முதற் தடவையாக தனியாக சந்திள்ளனர்.
ஜி 20 மாநாட்டுக்காக இத்தாலி சென்றுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி பாப்பரசரை சந்தித்து 1 மணி நேரம் பல விடயங்களை கலந்துரையாடியுள்ளார்.
இதன்போது கால தாமதமின்றி இந்தியாவுக்கு வருகை தருமாறு இந்திய பிரதமர் முன் வைத்த அழைப்பிதழை பாப்பரசர் பிரான்சிஸ் ஏற்றுக்கொண்டுள்ளார். அத்தோடு இது தனக்கு வழங்கப்பட்ட மிகப் பெரிசாக கருதுவதாகவும் விரைவில் இந்தியாவுக்கு பயணிக்க ஆர்வமாக உள்ளதாகவும் பாப்பரசர் தெரிவித்ததாகவும், இந்திய வெளியுறவு செயலாளர் தெரிவித்துள்ளார்.
தற்போது மாற்றமடைந்துள்ள வாநிலை தொடர்பாகவும், ஏழ்மையினை இல்லாதொழிப்பது தொடர்பிலும் இருவரும் கலந்துரையாடியதாக செய்திகள் வெளியாகிலுள்ளன.