நாடளாவிய ரீதியில் பற்றாக்குறையாக இருந்த 275,000 இன்சுலின் பொதிகள் இறக்குமதி செய்யப்பட்ட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இறக்குமதி செய்யப்பட்ட இன்சுலின் தொகை மருத்துவமனைகளுக்கு விநியோகிக்கும் நடவடிக்கைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடளாவிய ரீதியில் உள்ள வைத்தியசாலைகளில் தற்போது 78 வகையான மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாகவும், மேலும் 38 வகையான மருந்துகள் எதிர்வரும் 2 வாரங்களுக்குள் இறக்குமதி செய்யப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.