மன்னார் மாவட்ட வைத்தியசாலைக்கு மருத்துவ உதவி பொருட்கள் கையளிப்பு!

மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரிடம் ஒரு தொகுதி மருத்துவ பொருட்கள் மற்றும் உபகரணப்பொருட்கள் கையளிக்கப்பட்டுள்ளன.

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் வைத்திய சாலை அபிவிருத்திச்சபை எனக் குறிப்பிடப்படும் தொண்டு அமைப்பின் அனுசரணையில் இன்று (23.08) மதியம் இந்த உதவி பொருட்கள் கையளிக்கப்பட்டுள்ளன.

குறித்த அமைப்பின் தலைவர் சுபேதி தேரர் சுமார் 40 மில்லியன் ரூபாய் பெறுமதியான மருத்துவ பொருட்கள் மற்றும் உபகரண பொருட்கள் இவ்வாறு கையளிக்கப்பட்டுள்ளன.

இதற்கான நிதி பங்களிப்பு மற்றும் அனுசரணையை வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் மற்றும் இலங்கையை சேராதவர்கள் வழங்கி உள்ளனர். குறித்த மருத்துவ உபகரணங்கள் நேரடியாக வெளிநாட்டில் இருந்து இலங்கைக்கு தருவிக்கப்பட்டுள்ளன.

மன்னார் மாவட்ட வைத்தியசாலைக்கு மருத்துவ உதவி பொருட்கள் கையளிப்பு!
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version