நாட்டிற்குத் தேவையான 90% மருந்துப் பொருட்கள் வெளிநாடுகளில் இருந்து கொண்டு வரப்படுவதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
இந்த நாட்டுக்குத் தேவையான மருந்துகளில் 10-15% மட்டுமே இந்நாட்டில் உற்பத்தி செய்யப்படுவதாகவும், அதற்குத் தேவையான மூலப்பொருட்களும் வெளிநாடுகளில் இருந்து கொண்டு வரப்படுவதாகவும் அவர் கூறினார்.
2015ஆம் ஆண்டு ஒரு டொலர் 130 ரூபாவாக இருந்த நிலையில் இன்று ஒரு டொலர் 320 ரூபாவை தாண்டியுள்ளதாகவும் அதற்கேற்ப மருந்துகளின் விலை மும்மடங்கு அதிகரித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.